- Wednesday
- June 17th, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை ஒன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றையதினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு...
2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16) பி. ப. 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும்...
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி செவ்வாய்க்கிழமை (16) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் புதன்கிழமை (17) வழக்கு அழைக்கப்பட்டு, நீதி...
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16.06.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும்...
