சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் சங்கீத்சனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் ; மீள்குடியேற்ற கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்னெடுக்கவுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள்...
Ad Widget

குருந்தூர் மலையில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் வெளிப்படவில்லை!!

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மேலதிக செயலாளர் (நிர்வாகம்) தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத்...

பொது இடங்களில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்களை கண்காணிக்க கமரா!!

பொதுமக்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை 24 மணிநேரமும் வழங்கும் வகையில் கழிவு சேகரிப்பு மையங்கள் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நிறுவப்பட்டு நடைமுறையில் உள்ளநிலையில் இதற்கு மாறாக பொது இடங்களில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்கள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு தண்டப்பணம் அறவிடும் செயற்பாடும் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இச் செயற்பாட்டினை மேலும் விரிவுபடுத்தும்...

செம்மணியில் மேலும் 02 மனித என்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 22ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அகழ்வின் போது 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...