யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, யாழ். வைத்தியசாலை தீ விபத்து விவகாரம்...

செம்மணி நேற்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (10) 21 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றுடன் 339 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 318 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நேற்று 07 என்புக்...
Ad Widget

எனது உயிருக்கு தமிழரசுக் கட்சியால் அச்சுறுத்தல்: சபாநாயகரிடம் அர்ச்சுனா எம்.பி. அவசர கோரிக்கை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களை சந்திப்பத்தில் எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும்...