மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த அரசியல் கட்சிகள் இணக்கம்!!

இடைநிறுத்தப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலை தற்காலிகமாக பழைய முறையில் நடத்துவதற்கும், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அரசியல் கட்சிகள் சுயமாக தீர்மானம் எடுக்க அனுமதிப்பதற்கும் அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை பெறும் நோக்கில் இன்று (26) செவ்வாய்க்கிழமை பெப்ரல்...

எரிபொருள் விலை தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் (CPSTL) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர்...
Ad Widget

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்கு தடையா?

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில்... "கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக் காலத்தில் தன்சல் வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கும் வட மாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும்...

வித்யா கொலை வழக்கில் உயிர் மாய்துகொண்ட நபரின் இறுதி சடங்கு அரச செலவில்!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம்(25) உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,...

தையிட்டி தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கு போலியானது – செல்வராஜா கஜேந்திரன்

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பலாலி பொலிசாரால் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த 2025...

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம் : இனி வீட்டில் இருந்தபடியே Smartphone மூலம் பதிவு!

புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சேவைத் தளத்தின் கீழ் பொதுமக்கள் இனி வீட்டில் இருந்தவாறு Smartphone ஊடாக சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களில் பதிவு செய்துகொள்ள முடியும் என்று சமூகப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது. www.socialsecurity.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சமூகப் பாதுகாப்பு சேவைகளை மிகவும் திறமையாகவும் வசதியாகவும் அணுகுவதற்கு வசதிகளை வழங்குவதே இந்த டிஜிட்டல் மயமாக்கலின்...

மூளைக்காய்ச்சல் சந்தேகத்தில் 63 பேர் அடையாளம் ; 32 பேருக்கு தொற்று உறுதி – சுகாதார அமைச்சு

மூளைக்காய்ச்சல் அல்லது மெனின்ஜைடிஸ் எனும் வைரஸ் நோய் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 63 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 32 பேருக்கு இந்நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபெம தெரிவித்தார். நோய் பரவல் தொடர்பில் திங்கட்கிழமை (25) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்...