சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

சந்திரகுமார் தலைமையிலான அணியினருடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திரகுமார் அணியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சூழ்நிலை இல்லை எனத் தெரிவித்தார்....

தையிட்டி காணிகளை விடுவிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாகத் தெரியவில்லை – செல்வராசா கஜேந்திரன்

தையிட்டி விகாரை பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக்கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் புதன்கிழமை...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று...

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை!!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்த நெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தெரியவருகையில் நேற்று (15) 3.00 மணிக்கு நெடுந்தாரகை படகு நெடுந்தீவின் மாவிலித் துறைமுகத்தில் இருந்து சேவையை முன்னெடுத்திருந்தது. இன்றைய நாளின் இறுதிச்...

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய ‘கவனயீர்ப்பு போராட்டத்துக்கான’ அழைப்பு

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய 'கவனயீர்ப்பு போராட்டத்துக்கு’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது எமது அழகிய தீவு. நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில் சிக்கி, நாளாந்தம் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது என்பது எமது மக்கள்...

யாழில் 11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 38 வயதுடையவர் கைது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை...