- Tuesday
- April 7th, 2026
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த கிணற்றிலிருந்து விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காகச் சென்ற விவசாயி ஒருவர், கிணற்றிற்கு அருகாமையில் பாதணி (செருப்பு) இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றினுள்...
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விசேட விடுமுறை முறையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த விசேட விடுமுறை முறைமை இரத்து செய்யப்படுகிறது. அரசாங்க ஊழியர்கள்,...
வடக்கு பாதை புனரமைப்புமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை (09) முதல் வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் கடுகதி புகையிரதம் மற்றும் யாழ் இரவு தபால் புகையிரதம் எதிர்வரும் வியாழக்கிழமை முதலும், யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத திணைக்களம்...
