“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் கையொழுத்து போராட்டம்!

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்" என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகிய குறித்த போராட்டம், திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும்...

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட ஆலோசனைகள்!!

நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். இன்றைய இரவில் நித்திரையைத் தவிர்த்துப் படிப்பதில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல என்றும், மத வழிபாடுகளில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை...
Ad Widget

வலி வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் – அமைச்சர் சந்திரசேகரன்

வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியபோது இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே...

நீதிமன்ற நடவடிக்கைகளை இன்று தவிர்க்கும் சட்டத்தரணிகள்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) உறுப்பினர்கள் இன்று (16) எந்தவொரு வழக்குகளுக்காகவும் நாடளாவிய நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதை தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர். தலங்கம, அக்குரேகொடவில் அண்மையில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நேற்று (15) நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறித்த துப்பாக்கிச் சூட்டின் தாக்கங்கள் குறித்து BASL...