பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி!!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும்...

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுக்கும் எச்சரிக்கை!!

யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனவே...
Ad Widget

யாழ்ப்பாணத்திற்கு 3,700க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) 3,729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எரிவாயு விநியோகம் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், இன்று(03) 1,716 சிலிண்டர்களும், நாளை...

மதியம் 2 மணிக்குப் பின் மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில்...

சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் எந்தவிதமான சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அதன்படி, வேரஹெர பிரதான அலுவலகம் உட்பட...