- Monday
- November 17th, 2025
அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப்...
பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் நிதியாண்டு தொடர்பாக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்தத்...
இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத்...
