செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்!

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில்...

வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல்!!

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில்...
Ad Widget

வெப்பநிலை உச்சத்தை எட்டுமென எச்சரிக்கை!!

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த வெப்பத்தை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்குமென்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிக நீர் அருந்துமாறும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க...

தியாக தீபத்தின் ஆவண கூடத்திற்கு கஜேந்திரகுமார் அணி தடையேற்படுத்தி உள்ளதாக மணிவண்ணன் குற்றச்சாட்டு!!

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்வதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...