- Sunday
- September 7th, 2025

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை - மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை...

போரின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், மீனவ...

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் ஜனாதிபதி மண்டைதீவு மனிதப்புதைகுழி தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட்...

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும்...

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும். அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகவும் முறையாகவும்...

இன்று (01) முதல் எரிபொருளுக்கான புதிய விலை நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்தது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டது – புதிய விலை 283 ரூபா. சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.12...