- Friday
- July 4th, 2025

இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்....

தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக காவல்துறை சைபர் குற்றப்பிரிவிலும் முறைப்பாடு அளிக்கலாம்.

நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என...

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். செம்மணி...