- Thursday
- May 1st, 2025

35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர். கடந்த 10ஆம்...

யாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் திங்கட்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பகுதியில் போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்று , கூரிய ஆயுதங்களுடன் வீடொன்றில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை இளவாலை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். அதன் போது , மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (28) மாலை மன்னாரில் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் குறித்த நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேரும், கோப்பாய்...