- Monday
- December 9th, 2024
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்...
புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடும் மழை பெய்துவரும் இந்நாட்களில் சாலை வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள், போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதுக்குடியிருப்பின் பல இடங்களில் வெள்ள...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன் சூரியராஜா தெரிவித்தார். நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்....
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது அர்ச்சுனா இராமநாதன் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்திலிருந்து...
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது....
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றிரவு (25) 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 290 கி.மீ தொலைவிலும் திருகோணமலையில் இருந்து 410 கி.மீ தொலைவிலும் தென்கிழக்கே நிலை கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது மேலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த வேறு பரீட்சை...