ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு – மூவர் கைது!

வவுனியா, வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று (19) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை...

சுழிபுரத்தில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Widget

பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. அத்துடன் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்றும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,078 ஆகும். கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகளவான டெங்கு நோயாளர்கள்...