புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பெற்றோர்கள் சிலரினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரிதி...

ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இராமலிங்கம் சந்திரசேகர்மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கமுன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும், மகளிர் மற்றும்...
Ad Widget

விசேட தேவையுடைய ஒருவருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளித்த தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியானது விசேட தேவையுடைய ஒருவருக்கு தனது தேசிய பட்டியலில் வாய்ப்பளித்துள்ளது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பாராளுமன்றத்தில் முதல் தடவையாக உடல் ஊனமுற்ற ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வையற்றவர்களின் பிரதிநிதியாக பாராளுமன்றில் செயற்படவிருப்பதால் அவரது நியமனம்...

பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன – ஜனாதிபதி

நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும் தெற்கை வடக்கிற்கு எதிராகவும் நிலைநிறுத்தும் அரசியலால் நீண்டகாலமாக வரையறுக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தேர்தல் பிரிவினைவாத அரசியல்...

புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிப்பு! அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார். பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு,...

சுமந்திரன் வடக்கு முதலமைச்சராக வேண்டும்! சிறிதரன்

எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை அவர் பொறுமையாக இருந்து வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நேற்று (17) வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தின் போது, சிறிதரன் இதனை தெரிவித்தார். சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரது சேவை...

‘ஆவா’ குழுவை சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் மட்டக்குளியில் கைது!

மட்டக்குளி பிரதேசத்தில் சனிக்கிழமை(16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி...

இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்!!

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரியவருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது...

அர்ப்பணிப்பான சேவையை வழங்குவேன் – சத்தியலிங்கம்

என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல...