- Monday
- December 9th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை விளக்கினார். "கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு...
சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது. இலங்கை - இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது, மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது....
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று (10) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். வடக்கில் தமிழ் மக்களின்...
சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன. சுன்னாகம்...
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை...
சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார். சுன்னாகம் பகுதியில் கடந்த சனிக்கிழமை வான் - மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வாகன...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. இதேவேளை, நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலன் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய...