- Sunday
- September 15th, 2024
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போதைய பொறுப்புகள் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 50% வரையிலான அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவை சம்பள...
தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. இதன்போது, சிறீதரனால் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் பொன்னாடை போர்த்தி,...
நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ,இடம்பெற்ற குறித்த வாள்வெட்டு சம்பவத்தில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் இளைஞனே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில்...
வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை தேறி வருவதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா எனும் இளம் தாய், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது...
யாழ்ப்பாணத்தில் நேற்று ஏற்பட்ட மினசூறாவளி காற்று காரணமாக குருநகர் பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தின் கூரை பறந்து சேதமடைந்தது. குறித்த அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பகுதியவில் சேதமடைந்ததுடன் 11பேர் பாதிப்படைந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டது. அதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட...
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும்...
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை...
நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில்...
கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று 52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித...
யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் நேற்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , மாவட்ட செயலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து குறித்த யுவதிகள் கைதானதாக கூறப்படுகின்றது. குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள்...
பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரனிற்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்....
வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது வவுனியா மன்னர் வீதியில் இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் இயங்கி வந்த நிலையில் இடவசதி மற்றும் பொதுமக்களின் வசதி கருதி குறித்த இடத்தில் தொடர்ச்சியாக அலுவலகத்தை நடத்த முடியாத காரணத்தினால் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மன்னார் வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை நேற்று (15) ஆரம்பமானது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து...
நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை...
தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும்.தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது. தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்....
தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சிங்கள அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை, கடந்த...
Loading posts...
All posts loaded
No more posts