Ad Widget

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு 3 மாதங்கள் விடுமுறை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய வேளை எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விடுமுறைக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று முதல் மூன்று மாதங்களுக்கு...

ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்ல மறுக்கும் மாணவன்!!

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில்...
Ad Widget

வெளிநாட்டில் உள்ள ஒருவரின் காணியை உரிமை மாற்றம் செய்த இரு பெண்கள் கைது!

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு...

யாழில் முதியவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

யாழில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். [caption id="attachment_99954" align="alignnone" width="300"] Arrested man in handcuffs with hands behind back[/caption] அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதியவரின் இறப்பில்...

யாழில் முரல் மீன்தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ். பண்ணைக் கடலில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த மைக்கல் டினோஜன் என்ற 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை முரல் மீனொன்று இளைஞனின் கழுத்தைத் தாக்கியுள்ளதாக...

இந்தியாவின் நிதியுதவியுடன் யாழில் மழை நீர் சேகரிப்புத் தாங்கிகள்!!

இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழை நீர் சேகரிப்புத் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2016.10.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கபட்டுள்ளது. இக்கருத்திட்டம் 3 வருடகாலத்தில்...