- Tuesday
- July 1st, 2025

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,...

தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒண்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நேற்று கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இக் கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார். சம்பளத்தில்...

யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதில் இலங்கை...

யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றிலேயே குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றது. சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக மருந்தகமொன்றை சோதனையிட சென்றனர்....

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை பொறுத்த வரையில்...