காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்!

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று (01) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

மர்மமான முறையில் தீக்காயங்களுக்குள்ளான ஈ.பி.டி.பி.யின் அமைப்பாளர் உயிரிழப்பு!!

வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் தீக்காயங்களுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் (20) அன்று இரவு நபரொருவர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதன் போது, மேலதிக சிகிச்சைக்காக...
Ad Widget

பொலிஸார் – படையினர் என்ன செய்கிறார்கள்?? வாள்வெட்டுக் குழுக்களின் முதலாளிகள் இராணுவத்தினரா? – சி.சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன் என்றார். பாராளுமன்ற...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்....

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஸ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று...

யாழில் விபத்தில் சிக்கிய வைத்தியர் படுகாயம்!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் இன்று திங்கட்கிழமை (01) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின. இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில்...

இறுதிக் கிரியைகளுக்காக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ள சம்பந்தனின் பூதவுடல்

உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச்...