Ad Widget

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்!

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர். தாய், தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர்...

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது!

சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதுடைய ஆண் ஒருவரும் 37...
Ad Widget

மோடியின் வெற்றி – யாழ்ப்பாணத்தில் வைரவருக்கு தேங்காய் உடைத்து கொண்டாடிய சிவசேனை!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாண நகரில் நேற்று மாலை கொண்டாடின. யாழ். நகரிலுள்ள வைரவர் ஆலயத்துக்கு முன்பாக இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறு தேங்காய்கள்...

பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில்...

கைதடியில் வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த...

யாழில் கைதான போலி வைத்தியர் பல பெண்களிடமும் பண மோசடி!!

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்துப் பல இலட்ச ரூபாய் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்,நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளமையுடன். வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளைப் பேணி அவர்களை மிரட்டி...

புங்குடுதீவில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...