Ad Widget

எரிமலையால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!!

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 1871 ஆம் ஆண்டு இவ்வாறு வெடித்த எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, எரிமலையைச் சுற்றி...

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்!!

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள்...
Ad Widget

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது” குறித்த மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின்...

அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ.ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை நேற்று முன்தினம் (16) பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த...

சாவகச்சேரியில் தப்பியோடிய இரு கைதிகள் மீண்டும் கைது!

சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரும், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரும், வழக்கொன்றுக்காக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து , சாவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்....

வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் (Department of Meteorology) கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல்...