Ad Widget

முச்சக்கர வண்டியைத் திருடியவர் சைக்கிளில் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத் திருடி சென்றவரைப் பொலிஸார் கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு , மருத்துவ மனைக்கு சென்று திரும்பிய வேளை தனது...

கார்த்திகை பூ அலங்கார விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் பொலிஸார் வாக்குமூலம்

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அண்மையில் நடத்தப்பட்ட இல்ல மெய்வல்லுனர் போட்டியின்போது, கார்த்திகை பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் ஆசிரியர்...
Ad Widget

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

”அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார். கேகாலையில்(Kegalle) நேற்றையதினம்(07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரச ஊழியர்களின் நலன் கருதி சம்பளத்துடன் 10,000 ரூபாய்...

வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை...

உலகில் இன்று ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம்!

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்( Total Solar Eclipse) தென்படவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் என்பது மிகவும்...

நாட்டின் மீது பற்றுவைத்த சிறுவன்: உக்ரைன் இராணுவம் வழங்கிய அங்கீகாரம்

ரஷ்யா - உக்ரைன் (russia - ukraine)இடையிலான போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நாட்டின் மீது வைத்த பற்றை அந்நாட்டு இராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், போர் தீவிரமடைந்துள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன்...