Ad Widget

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனைத்...

சுழிபுரத்தில் புத்தர் சிலை!! : அச்சத்தில் மக்கள்!!

சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிலையானது கடற்படையினரால் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இது பின்னர் விகாரையாகத் தோற்றம் பெறலாம்...
Ad Widget

சாந்தனின் வித்துடல் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது!

சாந்தனின் வித்துடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது! சாந்தனின் புகழுடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் விதைக்கப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம்...

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இன்று தொடக்கம் மின் சாரக்கட்டணத்தை 21.9 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த கட்டணத் திருத்தம் போதுமானது இல்லை என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர்...

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று அலரி மாளிகைக்குள் நுழைந்த இருவர்!!

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை...

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் விலைத் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10...