Ad Widget

கடந்த வருடத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 76 பேர் விபத்தினால் பலி!!

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

யாழில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் . யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சாதாரண உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த இருவரும்...
Ad Widget

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான இந்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது. பின்னர், ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஆளுநரின் பிரதிச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அந்த...

யாழ் பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா மார்ச்சில்!!

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியான மாணவர்களின் விபரங்கள் யாழ் பல்கலைக்கழக இணையத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழில் 106 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப...

தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!

யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல்...

இலங்கையில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்!!

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து நிலைமைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற...