Ad Widget

யாழில் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி!! ரம்பா மற்றும் கலா மாஸ்டர் வருகை!!

NORTHERN UNI இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் இன்று செவ்வாய்க்கிழமை (6) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் (9)ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே இவர்கள்...

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்!

முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, அதன் பெறுபேறுகளுக்கு அமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...
Ad Widget

வடக்கில் வறுமையினால் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் கல்வி!

வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில்” வறுமைகாரணமாக மாணவர்களின் அடைவுமட்டங்கள் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய தேவை குறித்தும்...

சாதனை முயற்சியில் யாழ் இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து குறித்த இளைஞர்கள்...

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்!! – சுகாஸ்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தினை கரிநாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பலர் தாக்கப்பட்டமை குறித்து கொழும்பில் நாடாளுமன்ற...

வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பல்கலை மாணவன் மன்றாட்டாம்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என பாதிக்கப்பட்ட...

கில்மிஷாவுக்கு பாடசாலையில் கௌரவிப்பு!!

கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். அண்மையில் இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின்...

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05.02.2024) முன்வைத்திருந்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல்...