Ad Widget

போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். இதன்போது மாணவர்கள் சிலரால் இடையூறு...

மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

யாழ்பாணம் சோனெழு, கோப்பாய் மத்திய பகுதியில் மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை நேற்று புதன்கிழமை (08) உயிரிழந்துள்ளார். முத்துத்ததம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்றையதினம் விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கி விட்டார். இந்நிலையில், அவரை உடனடியாக...
Ad Widget

அரசாங்கம் சைவ மக்களின் மனங்களை நோகச் செய்கிறது!! இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல!!

அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரச அதிகாரிகள் எவ்விதமான அக்கறையும்...

சுவஸ்திகாவை உரையாற்ற அனுமதிக்க வேண்டும் – யாழ் .பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணி சுவாஸ்திகா அருலிங்கம் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி...

வடக்கு மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் அறிவிப்பு

வடக்கு மாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாண நதி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, எமது பாரம்பரியத்திற்கு ஏற்ப தண்ணீர் பிரச்சனையை...

யாழில் உரிமைகோரப்படாத நிலையில் 3 சடலங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார். கடந்த 22ஆம் திகதி விடுதி இலக்கம் 34இல் அனுமதிக்கப்பட்ட அடையாளங்காணப்படாத பெண்ணொருவரின் சடலமும், கடந்த 23ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த...

மின்தடை முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மின் தடைகள் தொடர்பில் அழைப்பு நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும்...

யாழ்ப்பணத்தில் போதை விருந்து ; சமூக ஆர்வலர்கள் கடும் விசனம்!!

யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டம் என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1,500 ரூபாய்க்கும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1,000 ரூபாய்...

யாழில் சமாதானத்துக்கு குந்தகம் விளைவித்த 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேருக்கு விளக்கமறியல்!!

யாழ். கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை நேற்று(08.11.2023)யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கோப்பாய் மத்தி...