Ad Widget

பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்மை என்பன அதிகரித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க முயற்சி!!

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று வியாழக்கிழமை (25) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய...
Ad Widget

வடக்கு புகையிரத சேவை குறித்த அறிவிப்பு!!

ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு புகையிரத சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று (புதன்கிழமை) 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று கொரோனாதொற்றால் ஒரு மரணம் பதிவாகியிருந்தது. இன்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,408 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் – க.சுகாஸ்

தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள்...

ரஷ்ய தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள்! குழப்பத்தில் உக்ரைன்

உக்ரைன் ரஷ்ய எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான Belgorod மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் விடயம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ளதுடன் உக்ரைன் புடினுக்கு எதிரான ரஷ்ய குழுக்கள்தான் அந்த தாக்குதலுக்கு காரணம் என்று கூறியுள்ளது. இதற்கிடையில் அந்த தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பான வாகனங்களும் பங்கேற்றதற்கு...