- Thursday
- June 8th, 2023

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை...

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிசாரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திற்கு சென்றனர், அவர்களிடம்...

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் நேற்று (புதன்கிழமை) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டடிருந்தனர், இதேவேளை வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி...

மன்னாரில் பாடசாலைகளை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த ஒரு கும்பல் முயற்சிப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு எதிரிலும் அதனை அண்டிய வீதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் வேன் ஒன்றில் சென்ற கும்பலொன்று உணவுப் பண்டமொன்றை வழங்கி இரண்டு மாணவர்களை...

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை நெதர்லாந்து அரசு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான ஆயுத உதவியினால் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை வழங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய...