நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர் நிர்மாணம் செய்யப்படும் – டக்ளஸ்

இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

எரிபொருள் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை...
Ad Widget

ஏப்ரலில் பால் மாவின் விலை மேலும் குறைவடையும் என தகவல்!

ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

8 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றனர்

கிளிநொச்சி பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 1 ஆண், 5 பெண்கள், 1 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இவ்வாறு நேற்று முன்தினம் (27) இரவு 8 மணி அளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து 1.45...

மாபெரும் போராட்டத்திற்கு மாவை சேனாதிராஜா அழைப்பு !!

வவுனியாவில் நாளை இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆதிலிங்கேஸ்வரர் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி...

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை – வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்

இலங்கையில் இன்று முதல் கடமைக்கு சமூகமளிக்காத எரிபொருள் நிலைய பணியாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிறுவனங்கள் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்த தொழிற்சங்க தலைவர்கள் உட்பட அனைத்து பெட்ரோலிய கூட்டுத்தான...

ரஷ்ய – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன்! டிரம்ப்

அதிபராக நான் மீண்டும்தேர்வு செய்யப்பட்டால், முதற்கட்டாமாக ரஷ்ய அதிபர் புடினையும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் நேரில் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான டொனால்டு...