Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இடையில் மோதல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்டமையை அடுத்து இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இருவர் இன்றைய தினம் (புதன்கிழமை) வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர். அதனை அடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இன்று (புதன்கிழமை) ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 312.61 ஆகவும், விற்பனை விலை 330.16 ஆகவும் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 316.84 ஆகவும், விற்பனை விலை...
Ad Widget

யாழ்.மாநகரசபை பதவிக்காலம் முடிந்ததால் ஊழியர்களுக்கு கொண்டாட்டம்! மக்களுக்கு திண்டாட்டம்!!

யாழ்.மாநகரசபை கலைக்கப்பட்டதன் பின்னர் மாநகரசபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி மதிய நேர உணவுக்காக வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திங்கட்கிழமை பங்குனி திங்கள் நாள் அன்று மாநகர ஆணையாளர் பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 3 மணி கடந்தும் மதிய நேர உணவுக்கு சென்று...

மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? நாளை வெளியாகிறது அறிவிப்பு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது. இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து...

நெதர்லாந்திற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்ததையடுத்து அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் சர்வதேச குற்றவியல்...