Ad Widget

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!!

அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சரத்வத்தேச நாணய நிதியத்தின் உதவியும் விரைவில் கிடைக்கவுள்ள நிலையில்...

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84 ஆகவும், விற்பனை பெறுமதி 335.68 சதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து...
Ad Widget

யாழ்.இந்துக் கல்லுாரி மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ்.இந்துக் கல்லுாரியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் தெய்வாதீனமாக அருகில் இருந்த மின் வயரில் சிக்குண்டதன்...

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற...

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது சிறிதரன் ஆதரவு கோரினார் – டக்ளஸ் தரப்பு!

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென அந்த கட்சியின் யாழ்.மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று(திங்கட்கிழமை)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்திலும் இலங்கை...

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான கடலை 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை!!

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளை. இதில் பெங்களூரைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா...

யாழ்.நாகர் கோவிலில் துப்பாக்கி சூடு – ஆலய சப்பர கொட்டகைக்கும் தீ வைப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள் காணப்படுகின்ற போதிலும் , பொலிஸார் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் யார் துப்பாக்கி சூடு நடத்தியது எனவும் ? பொலிஸார்...

பப்பூவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்பூவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்கு பகுதிதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்! வேலையும் பறிபோகும் – கடும் எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து...