Ad Widget

உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் தாமதமாகும் சாத்தியம்?

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம் திகதிக்குள் தமக்கு கிடைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எவ்வாறாயினும் இன்றைய தினத்திற்குள் உரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தால் குறிப்பிட்ட திகதிக்குள் அவற்றை அச்சிட முடியாது...

பகிடிவதையால் தற்கொலைக்கு முயன்ற மொறட்டுவ பல்கலைகழக மாணவன்!!

மொறட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் பகிடிவதையினால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். வறுமையான குடும்பப் பின்னணியி லிருந்து மொறட்டுவ பல்கலைக்கழகத் துக்குத் தெரிவான 23 வயதான மாணவனே பகிடிவதைக் கொடுமையால் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான். சிரேஷ்ட மாணவர்கள் தினமும் இரவு 6...
Ad Widget

யாழ்.மாவட்டத்தில் 13 ஆயிரத்து 888 பேர் போதிய உணவில்லாமல் வாடுகின்றனர்! – மாவட்டச் செயலகம்

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு உற்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 966 பேருடன் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை 2ஆயிரத்து 618 பேருடன்...

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல்!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு சம்பவம் தங்களுக்கும்...

ஜனநாயக விரேத செயற்பாடுகளை மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு

இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளதாகவும் இதன்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...

இந்தியாவில் தீவிரமடையும் நோய்த்தொற்று!!

கோவிட் போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் புதுவிதக்காய்ச்சலொன்று பரவி வருகிறது. இவ்வைரஸ் காய்ச்சல் தொடர்பில் இலங்கை மருத்துவர்களும் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது H3N2 எனப்படும் வைரஸினால் ஏற்படுத்தப்படும் காய்ச்சல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும்...

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்!!

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் - அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள...

பாக்முட் நகரில் முன்னேறும் ரஷ்ய படைகள்: உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்படும் அபாயம்

வாழவே தகுதியில்லாத அளவிற்கு உக்ரைனின் பல நகரங்கள் போரால் உருக்குலைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் எல்லை நகரமான பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கைகளில் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்பட்டு விடும் என உக்ரைன் அதிபர் கவலை தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் பாக்முட் நகரை...