Ad Widget

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சம்பள முரண்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல ஆசிரியர் சங்கங்கள் நேற்று (புதன்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்ததன் பின்னணியில்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு...
Ad Widget

கோதுமை மாவின் விலையும் குறைப்பு !

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்றையதினம் (புதன்கிழமை) முதல் குறைக்கப்பட்டதாக செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

வேலை நிறுத்தப் போராட்டதினால் இன்னல்களை எதிர்கொண்டுள்ள யாழ்.போதனா நோயாளர்கள்!

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம்...

QR முறைமையில் மாற்றம் – அமைச்சர் அறிவிப்பு

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது. இதற்கிடையில், QR முறை மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். மகளிர் தினமான நேற்று தமக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் வெளிக்கொணரப்படும் இந்த பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது....

உக்ரைன் கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறிய ரஷ்ய டாங்கிகள்

உக்ரைன் - ரஷ்ய போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் போர் பாக்முட் நகரில் 10 மாதங்களுக்கு மேலாக இருதரப்பினரும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் இராணுவம் பின்வாங்கப்போவதில்லை என அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவ்வாறான பின்னணியில்...