Ad Widget

யாழிலுள்ள அரச காணிகளை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது. நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் ,...

ஆட்கொணர்வு மனு மீதான கட்டளை இராணுவத்துக்கு எதிராக உள்ளமை பெரிய வெற்றி – எஸ். இரட்ணவேல்

ஆட்கொணாவு மனு மீதான கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான...
Ad Widget

பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் – ஓவிய கண்காட்சி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள்...

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டிமுடிக்கப்பட்டுள்ள விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும்...

ஜனாதிபதி பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார்

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும்,தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு என தாம் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு,தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன்...

விக்கி அவரின் சம்மந்தியான வாசுதேவவுடன் இணைந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுகின்றார் – சாணக்கியன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

உக்ரைன் – ரஷ்ய போருக்கான காரணத்தை முதன்முதலில் வெளியிட்ட புடின்

உக்ரைனில் ரஷ்யாவுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை மீட்கவே தமது இராணுவம் போராடி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும் வாய்ப்புகள் உள்ளதாக உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் தாக்குதலுக்கு ஆதரவாக மாஸ்கோவில் அரசால் ஏற்பாடு...