- Tuesday
- May 13th, 2025

மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான உரிமையின்...

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்தினை பயன்படுத்தும் உள்ளூர் மக்களை கடற்படையினர் விலங்குகள்போல் நடத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை படகில் முன்னுரிமைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஏற்றிவிட்டு, அதன் பின்னரே ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தாமதமாகி படகில் அனுமதிக்கப்படுவதால் அரச உத்தியோகத்தர்கள்...

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காதமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் கவலை...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் சிவராத்திரி தினத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் விவரத்தை பகிரங்கப்படுத்தி அதனை...

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா ரஷ்யாவுக்கு உதவலாம் என வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க சீனா திட்டமிட்டு வருவதாகவும், உதவும் பட்சத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க மாகாணங்கள் செயலரான Antony...