- Tuesday
- May 13th, 2025

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் களமிறங்க தமிழரசுக் கட்சி தயாராகவே இருந்தது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், இருப்பினும் அதனை ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டார். மேலும் முடிவு எடுப்பதற்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மற்ற கட்சிகள் மீறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்...

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை...

யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியில் 52 வயதுடைய சுப்பிரமணியம் கலாநிதி என்ற பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரமபகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறியுள்ளனர்.

இரண்டு முறை ஜனாதிபதியும் மூன்று முறை பிரதமருமாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 77 வயதான அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வினவியபோது, கட்சி எடுக்கும் முடிவு இறுதியானது என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அமுள்ப்படுத்தவுள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த திட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் அறுவடை விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமை, விவசாயிகளுக்கான...

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் முதல் 6 - 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பாடத்தை எட்டாம்...

பிரித்தானியா உக்ரைனுக்கு Harpoon கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் வான் பரப்பில் இருந்து இலக்கை தாக்கக்கூடிய Storm Shadow ஏவுகணை ஆகியவற்றை வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட ஆயுத உதவியை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார். இதனை தொடர்ந்து அவசரமாக பிரித்தானியா...