- Tuesday
- May 13th, 2025

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி நாளை(புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது,வடக்கிலேதான் தமிழர்கள் உள்ளார்கள் என்ற ஒரு போலியான முகத்தினை இலங்கை அரசு காலம்காலமாக ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்துவருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம். எங்களது உயிர்களை மீறி எங்களின் பிணங்களில் ஏறித்தான் வடகிழக்கினை பிரிக்கமுடியும்...

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ,...

யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோர்ல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை...

சந்தையில் கிடைக்கும் விலைக்கு ஏற்ப 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால், முன்பதிவு வெளியிடப்பட்ட விலையில் மட்டுமே விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

அரச ஊழியர்கள் மீதான வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அரச நிறுவனங்களை மூடி அனைத்து அரச ஊழியர்களும் வீதிக்கு இறங்குவர் என அரச தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது பிரச்சினைகள் தொடர்பில் நிதி அமைச்சில் நேற்று கடிதமொன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்கங்களின்...