Ad Widget

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாணின் விலையும் உயரும் அபாயம் !

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ளவே முடியாது...

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார். சுதந்திரதினம்...
Ad Widget

நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கும்

நாளையிலிருந்து நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதி நாடு முழுவதும் பல இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது...

இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல: யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக...

20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2018 - 2019 மற்றும் 2020ம்...

ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! உண்மையை மறைக்கும் ரஷ்யா

உக்ரைன் மீதான படையெடுப்பு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இருத்தரப்பினரும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனின் - மகீவ்கா நகரில் படைகள் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும்,ரஷ்யா உண்மைத் தகவலை மறைத்துள்ளதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300 தாண்டும் என்றும்...