- Tuesday
- May 13th, 2025

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த 10ஆம் திகதி இவர்...

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், ஆசியாவிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள 18 இடங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. CNN Travel’sஇனினால் மதிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை விபரிக்கும் CNN Travel’s, பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தெற்கு கடற்கரை அல்லது அதன் மத்திய மலை நாட்டிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது....

கதிரியக்கத்தால் சுனாமிகளை ஏற்படுத்தும் பேரழிவைத் தரக்கூடிய ஆபத்தான ஆயுதம் ஒன்றை ரஷ்ய விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகளால் Poseidon என அழைக்கப்படும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலானது பேரழிவை ஏற்படுத்தும் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கும் திறன் கொண்டது எனவும், விளாடிமிர் புடின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மிகவும் மனிதாபிமானமற்ற பயங்கரமான ஆயுதம் இதுவெனவும் கூறுகின்றனர்....