Ad Widget

புதுக்குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் அரசியல் தலைவர்களின் உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டது

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் , தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றுவந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து இன்று (12) கைவிடப்பட்டுள்ளது. கடந்த ஒன்பதாம் திகதி (09) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு...

யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி செய்தவர் கைது!

தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு, சந்தேகநபரிடம் பணம் கொடுத்து , தாலி மற்றும் கொடியினை செய்து...
Ad Widget

தேசிய மக்கள் சக்தி யாழ். மாவட்டத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது!

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் (வியாழக்கிழமை) செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. வலிவடக்கு பிரதேச சபை, வலிமேற்கு பிரதேச சபை, யாழ் மாநகர சபை சாவகச்சேரி நகரசபை, காரைநகர் பிரதேச...

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த...

வடக்கு கிழக்கில் அங்கஜன் தலைமையில் சுதந்திரக் கட்சி “கை” சின்னத்தில் போட்டி

வடக்கு கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் இராமநாதன் தலைமையில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் சகல கட்சிகளும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் முன்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி செயலாளரும் நாடாளுமன்ற...

தமிழரசுக் கட்சியை சிதைக்கப் பார்க்கின்றீர்களா..! ரெலோ, புளொட் மீது சம்பந்தன் பாய்ச்சல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களை கைப்பற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆமோதித்து -...

உயிர் எப்போது போகுமென தெரியவில்லை! உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல்

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்ற சென்னை - ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர் (32) என்பவரே மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் இவ்வாறு உக்ரைன்...

710 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! வீதிகளில் குவியும் சடலங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாக்முட் நகரின் வீதிகளில் ரஷ்ய...