Ad Widget

திருத்தப்பட்ட மின் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்!!

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய கட்டணங்கள்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது...
Ad Widget

யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். அடுத்த மாதம் 11ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின்...

ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில்...

அரசாங்கத்திற்கு 7 நாட்கள் காலக்கெடு – தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடி முடிவு!

அரசியலமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம் என தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய(செவ்வாய்கிழமை) சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளன. அரசுடனான இன்றைய சர்வகட்சிப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது தொடர்பில்...

இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம்

இந்தோனோஷியா மற்றும் கிழக்கு திமோர் அருகில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் அம்போன் தீவிலிருந்து 427 கிலோமீற்றர் தொலைவில் கடல‍டியில் 86.9 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பூகம்பத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. திமோரின்...

மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மகிந்த

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவுளை,மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை...

விக்னேஸ்வரன் மணிவண்ணன் அதிரடித் தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இரு தரப்புக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்குக் கருத்துத்...

காணாமல்போன இரு பிரித்தானிய பிரஜைகள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உக்ரையில் தன்னார்வப் பணியைச் மேற்கொண்டிருந்த 28 மற்றும் 48 வயதுடைய இரு ஆண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இறுதியாக குறித்த இரு பிரித்தானிய பிரஜைகளும் வெள்ளிக்கிழமை சோலேடார் நகருக்குச் சென்றதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமீப நாட்களில் அங்கு...