Ad Widget

வடமாகாணத்தில் சிறுநீரக நோய், குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்!!

வடமாகாணத்தில் அப்பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில்...

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது. இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகரிப்பானது...
Ad Widget

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்!

கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்த தடை??

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அலுவலகங்களுக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன கூறியுள்ளார். புத்தாண்டுக்கான பணிகளைத் தொடங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சில இடங்களில் அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் பேஸ்புக், வட்ஸ்அப்பில் உலாவிய படி சேவைகளைப் பெற வந்த...

குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில்!

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (02) மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்த 4 நாட்களான...

எரிபொருள் விலை குறைப்பு!!

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 405 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் – டயனா கமகே!

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார...

ஒரே இரவில் உக்ரைனுக்குள் தொகையாக நுழைந்த விமானங்கள்:முற்றாக தாக்கி அழிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுமட்டுமன்றி புத்தாண்டு தினத்தன்று அண்டை நாடான உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 20 ஏவுகணைகளையும் வீசியதாகவும் உக்ரைன் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில்...