Ad Widget

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை!!! : ஜனாதிபதி

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த வருடத்தில்...

வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு!

வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்து,சுபோகரன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வழியில் தர சுட்டெண் சற்று உயர்வாக காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது சாதாரணமாக வளி...
Ad Widget

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று மாசடைவு வீதம் அதிகளவில் காணப்படுகின்றது. அது தொடர்பில் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுற்றுப்புறக் காற்று தர...

வெப் சீரிஸ் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கொரியன் சீரிஸ் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜொங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்துவரும் வடகொரியாவில் இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என எதுவும் கிடையாது. கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைவான டிவி சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கி வருகின்றன. இதனால், சீனா மற்றும் தென்...

யாழ். மாவட்டத்தில் சூறாவளியால் பாதிப்பு

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழை மரங்களும் முறிந்துள்ளன. இவ் சூறாவளி தாக்கத்தால் நேற்று (08) இரவு யாழ். மத்திய வீதி, பலாலி வீதி மற்றும் கந்தர்மடச் சந்தியினை இணைக்கும் பிரதான வீதியில் சமண்டலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால்...

நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

இலங்கையில் முகக் கவசம் அணியுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மீள் அறிவிப்பு வரும் வரை முகக் கவசம் அணிய வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தூசித் துகள்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட வளி மாசு பாரியளவில் குறைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய காற்றின் நிலை மற்றும் அதன்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை (9) விடுமுறையாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கலந்துரையாடிய...

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம்...