Ad Widget

மாவட்ட ரீதியாக லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு!!

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 4,610 ரூபாவாகும். அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை 4,990 ரூபாவாகும். பொருந்தக்கூடிய விலைகளின் முழுப் பட்டியல் கீழே...

வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணியுங்கள்!வடக்கு ஆளுநர்

வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்  தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ளசீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போம் கட்டாயமாக முக கவசம் அணியுமாறுகோரிக்கை...
Ad Widget

யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர்...

போதைப்பொருளுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவிகள்!

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் போதைப்பொருள் பாவனையால் சிறுவர் இல்லங்களில்...

யாழ் நுழைவாயிலில் பிரமாண்ட சிவலிங்க சிலை திறப்பு

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை நேற்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர்...

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முழு அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – டக்ளஸ்

கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும், ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லையென்றும் சபையில் தெரிவித்த அமைச்சர், அந்த நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு...

மாண்டூஸ் சூறாவளி ; கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370கிமீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் "மாண்டூஸ்" சூறாவளியாக குவிந்து இரவு 11.30 மணியளவில் அட்சரேகை 9.2N மற்றும் தீர்க்கரேகை 84.6Eக்கு அருகில் நேற்று வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூறாவளி டிசம்பர் 09-ம் திகதி பிற்பகுதியில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை...

2022 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்கவராக உக்ரைன் ஜனாதிபதி தெரிவு

உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இங்கிலாந்து டைம்ஸ் செய்தித்தாளின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். 44 வயதான உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரால் வீரர் என்று அழைக்கப்படுகின்றார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிராக தேசத்தை வழிநடத்தும் அதேவேளையில் ஜனநாயகத்தின் அடையாளமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பெப்ரவரி 24 அன்று ரஷ்யப்...