Ad Widget

யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும் ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை...

வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளமை காரணமாக அதனை எதிர்காதிருக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
Ad Widget

மன்னாரில் இருந்து சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்!

மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மதஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தனர். மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,இயக்குனர் எஸ்.அன்ரன் அடிகளாரின் ஒருங்கினைப்பில் மன்னாரில் இருந்து சர்வ மத தலைவர்கள் உள்ளடங்களாக குழு ஒன்று நேற்று (திங்கட்கிழமை) காலை மன்னாரில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றனர். மன்னார்...

இன்று முதல் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த நேர மாற்றத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில்...

வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2N இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி...