Ad Widget

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை!

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர், அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள்...

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய அனைத்து தரப்பிற்கும் கூட்டமைப்பு அழைப்பு !

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது, அதன்படி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு மூலம் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுவது குறித்து பேசப்படவுள்ளது. கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள்...
Ad Widget

அஞ்சலிக்காக நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும்....

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் இணக்கம்!

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று (திங்கட்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். அதன்படி டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு...

நாட்டின் பல மாகாணங்களில் கனமழை பெய்யும் சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில்...

நெருப்போடு விளையாட முயலாதீர்! – வடக்கு ஆளுநரிடம் சிறீகாந்தா வலியுறுத்து

வடக்கு மாகாண ஆளுநர் நெருப்போடு விளையாடுவதற்கு முயற்சிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ந.சிறீகாந்தா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வடக்கில் தனியார் காணிகளை படைத்தரப்புகளுக்கும் மற்றும் அரச திணைக்களங்களுக்கும் காணிகள் தேவைப்படுகின்றன என்ற பெயரில் சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் ஓர் அங்கமாகவே வடக்கு...

விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக எரிபொருளை வழங்கும் சீனா!

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சீனா எரிபொருளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீட்டர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் எரிபொருளில் 7.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் விவசாய...