Ad Widget

அடுத்த சிலமணி நேரங்களின் பின்னர் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழைக்கு வாய்ப்பு!!

இலங்கையின் வடக்கு பகுதியை தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிள்ளார். வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குடத்தனைக்கு நேரே கிழக்காக 112 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது. இது இன்னும் சில...

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக நா.வேதநாயகன்!

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் மூவரின்...
Ad Widget

யாழ். இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம்!

யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவகம் மீது நேற்று இரவு காரில் வந்த இனம் தெரியாத நபர் கண்ணாடி போத்தலினால் தாக்கி விட்டு சென்றதாக...

உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு! சட்டத்தரணியும் பிரபல கல்லூரி முன்னாள் அதிபரும் கைது!

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக்...

மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...

யாழ்.போதனா இருதய சத்திரசிகிச்சை பிரிவு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இருதய சத்திர கிச்சை நிலையம் புனரமைக்கப்பட்டு, யாழ். பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. ஞானபொன்ராஜ் உட்பட மருத்துவர்கள்,தாதியர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து...

அரியாலை பகுதியில் வாள்வெட்டு!! இளைஞர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியாலை தபால்கட்டை சந்தியில் நேற்று (10) மதிய வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவ்வழியே வந்த வரை, குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்...

4 இலட்சத்திற்கு மேற்பட்ட இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமை!!

ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதன் பாவனை நாட்டின் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கரை இலட்சம் இளம் தலைமுறையினர் அபாயகரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு முழுமையாக அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டரை வருடகாலமாக வரையறுக்கப்படும் என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்!!

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில்...

கனடா செல்ல முயன்று கடலில் சிக்கிய இலங்கையர் விரைவில் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள்!!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கப்பலில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். படகு ஆபத்தில் சிக்கிய போது அதிலிருந்த மாலுமி உட்பட தொழிலாளர்கள் தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற LADY R3 என்ற...