- Monday
- September 15th, 2025

கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும்...

யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் பேருந்து சேவைகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட யாழ் மாநகர முதல்வர் வி.மணிவணணன், யாழ் மாநகர ஆணையாளர் இ...

அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகள் சம்பந்தமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். வருடத்தின்...

உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. zoom தொழிநுட்பத்தினூடாக இடம்பெற்ற குரங்குக் காய்ச்சல் தொடர்பான விசேட கலந்துரையாடலின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா, வெளிநாடுகளில் இருந்து அறிகுறியற்ற நோயாளர்கள்கூட...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என...

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தைக் காண முடியும்....

எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் இன்று (08) முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில்...

கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும்...

இந்த போர் நடவடிக்கையில் சுமார் 75000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய கடற்படையினர் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கடிதம். இரத்தம் கொட்டும் உக்ரைன் போரில் இராணுவ மூலோபாயத்தை மாற்றியமைக்குமாறு ரஷ்ய கடற்படையினர் ஜனாதிபதி புடினுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடந்து வரும் நிலையில்,...